YSS/SRF தலைவரின் இந்தியப் பயணம் — 2027

YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்தஜியின் இந்தியப் பயணம் – 2027 - நிகழ்ச்சிக்கான சிறப்புப் படம்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!

நிகழ்ச்சியைப் பற்றி

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெல்லோஷிப் (YSS/SRF) அமைப்பின் மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி அவர்கள், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என்பதை அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அவரது வருகையின் போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு நகரங்களில் சிறப்பு ஒருநாள் நிகழ்ச்சிகளை ஸ்வாமிஜி நடத்த உள்ளார்:

  • ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 24: ஹைதராபாத்
  • ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21: நொய்டா

வரவிருக்கும் ஸ்வாமிஜி அவர்களின் வருகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் எதிர்நோக்குகிறோம். அவரது முந்தைய வருகைகளின்போது நம் அனைவருக்கும் கிடைத்த மகத்தான ஆன்மீக ஊக்கத்தையும், மனவெழுச்சியையும் நினைவுகூர்ந்து, அனைத்து YSS/SRF பக்தர்களையும் இந்த அருளார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

முந்தைய வருகைகளின் சிறப்பம்சங்கள்

ஸ்வாமிஜி அவர்களின் முந்தைய வருகைகளின்போது கிடைத்த இனிய நினைவுகளையும் அருளாசிகளையும் மீண்டும் நினைவுகூர்வதற்காக, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைப் பார்வையிடுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்:

ஃபோட்டோ ஆல்பம்

முந்தைய நிகழ்ச்சிகள்

para-ornament

மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் அனுபவம்

ஸ்வாமிஜி அவர்கள் 2025 ஆம் ஆண்டு வருகை தந்தபோது நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பக்தர்களின் சில அனுபவங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி விவரங்கள்

நிகழ்ச்சி நிரல்
  • ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 24: ஹைதராபாத்
  • ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 21: நொய்டா

ஸ்வாமி சிதானந்தஜி உடனான ஒவ்வொரு ஒருநாள் நிகழ்ச்சியிலும், காலையில் ஒரு நீண்ட தியானமும், மாலையில் ஒரு தியானமும் அதைத் தொடர்ந்து ஸ்வாமிஜியின் சத்சங்கமும் இடம்பெறும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள்

ஸ்வாமிஜியின் வருகையின் போது சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கும் ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு:

ஹைதராபாத்

முகவரி,
வியாஸ் நகர் ரோடு,
நர்சிங்கி,
ஹைதராபாத் – 500075
தெலுங்கானா

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

நொய்டா

யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — நொய்டா
பரமஹம்ஸ யோகானந்தா மார்க்
B-4, செக்டர் 62
நொய்டா – 201307
கௌதம் புத்த நகர்
உத்தரபிரதேசம்

கூகுள் மேப்ஸ் லிங்க்: இங்கே க்ளிக் செய்யவும்

பதிவு

பணம் செலுத்துதல்:

  • பதிவுக் கட்டணம் ஒருவருக்கு ₹ 1200 ஆகும். இக் கட்டணம் உணவுக் கட்டணத்தையும் உள்ளடக்கியது.
  • இருப்பினும், தங்குமிட வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கூடுதல் கட்டணம் இருக்கும், அதாவது ஒவ்வொரு பக்தரும் தங்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையையின் அடிப்படையில். தங்குமிடத்திற்கான கட்டண விவரங்கள் பின்வருமாறு:
    • ஹைதராபாத்: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,000
    • நொய்டா: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,250
  • நொய்டா நிகழ்ச்சிக்காக தங்குமிட வசதி கோரும் பக்தர்களுக்கு, நொய்டா ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து வழங்கப்படும்.
    தயவுசெய்து கவனிக்கவும்: YSS நொய்டா ஆசிரமத்திற்குள் எந்தவிதமான தங்குமிட வசதியும் கிடையாது.

பதிவுக் கட்டணத்தைச் செலுத்துவதில் சிரமம் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்புகொள்ளவும்.

பதிவு குறித்த தகவல்கள்

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன!

பக்தர்கள், YSS பக்தர் இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்; அல்லது YSS உதவி மையத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்; அல்லது ஏதேனும் ஒரு YSS ஆசிரமத்திற்கோ அல்லது YSS ஹைதராபாத் தியான கேந்திரத்திற்கோ நேரில் சென்று பதிவு செய்யலாம்.

பதிவு செய்யும் முறை குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு:

பக்தர் இணையதளம் மூலமாக ஆன்லைன் பதிவு:

விரைவாகவும் எளிதாகவும் பதிவு செய்ய, கீழே உள்ள பட்டனை அழுத்தி ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.

YSS உதவி மையம் மூலம் பதிவு:

(0651) 6655 555 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும் அல்லது helpdesk@yssi.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பின்வரும் விவரங்களுடன் மின்னஞ்சல் அனுப்பவும்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • முகவரி
  • மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
  • YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • நீங்கள் வருகை தரத் திட்டமிட்டுள்ள தேதி மற்றும் புறப்படும் தேதி

உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் பேமெண்ட் லிங்க் மூலம் தொகையைச் செலுத்தலாம்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

  • ஆர்வமுள்ள SRF பக்தர்கள், helpdesk@yssi.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • SRF பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே அவர்கள் உணவருந்தலாம். இருப்பினும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஹோட்டல்களில் தங்களுக்கான தங்குமிட வசதியை அவர்களே ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
para-ornament

கவனத்திற்கு:

  • பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் உங்களுக்கு உறுதிப்படுத்தல் தகவல் அனுப்பப்படும். அத்தகைய அறிவிப்பு எதுவும் உங்களுக்கு வரவில்லை என்றால், தயவுசெய்து YSS ராஞ்சி உதவி மையத்தை (0651) 6655 555 என்ற எண்ணிலோ அல்லது (helpdesk@yssi.org) என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
  • உங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்டு ஆனால் உங்களால் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், பதிவுக் கட்டணத்தை திரும்ப வழங்கவோ அல்லது வேறொரு நபருக்கு மாற்றவோ படமாட்டாது.

 

  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
  • 12 வயதுக்குக் குறைவான குழந்தைகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • பல்வேறு இடங்களிலும் தங்குமிட வசதிகள் குறைவாக உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், தங்குமிடம் வேண்டும் பதிவுகள், உறுதிசெய்யப்படும்.
  • இரு இடங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள்.
தங்குமிடம்

ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் நடைபெறும் ஒருநாள் நிகழ்ச்சிகளுக்கு, பக்தர்கள் நிகழ்ச்சி நடைபெறும் முந்தைய நாள் மாலை வந்து, நிகழ்ச்சி முடிந்த மறுநாள் காலை வரை தங்கிக்கொள்ளலாம். தங்குமிட வசதியைப் பயன்படுத்த விரும்பினால், பக்தர் தங்க விரும்பும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து கூடுதல் கட்டணம் இருக்கும். தங்குமிடக் கட்டணங்கள் பின்வருமாறு:

  • ஹைதராபாத்: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,000
  • நொய்டா: ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு ₹ 1,250


நொய்டா நிகழ்ச்சிக்காக தங்குமிட வசதி கோரும் பக்தர்களுக்கு, நொய்டா ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்: YSS நொய்டா ஆசிரமத்திற்குள் எந்தவிதமான தங்குமிட வசதியும் கிடையாது.

கவனிக்கவும்:

  • இரு இடங்களிலும் தங்குமிட வசதிகள் குறைவாக உள்ளதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தங்குமிடம் கோரும் பதிவுகள் உறுதிசெய்யப்படும்.
  • பகிரக்கூடிய தங்குமிட வசதி, பெண்கள் மற்றும் ஆண்களுக்குத் தனித்தனியாகப் வழங்கப்படும். எனவே, குடும்ப உறுப்பினர்கள் அதற்கேற்பத் திட்டமிட்டுத் தங்கள் உடைமைகளை கொண்டுவரக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • தங்குமிடம் அல்லது உணவுமுறையில் சிறப்பான தேவை உள்ள பக்தர்கள், அதற்கான ஏற்பாடுகளைத் தாங்களே செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் இங்கே உள்ளது.
தன்னார்வலர்கள்

வழக்கம்போல, பதிவு மேசை, தங்குமிட ஏற்பாடுகள், ஒலி-ஒளி வசதிகள், உணவு பரிமாறுதல், தூய்மைப் பணிகள், வழிகாட்டுதல் மற்றும் பிற பணிப்பிரிவுகளில் சேவை செய்வதற்கு பக்தர்-தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இவற்றில் சில பணிப்பிரிவுகளுக்கு, ஒவ்வொரு நிகழ்ச்சியும் தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பே தன்னார்வலர்கள் தேவைப்படலாம். நீங்கள் தன்னார்வலராக சேவை செய்ய விரும்பினால், பதிவுப் படிவத்தில் அதைக் குறிப்பிடவும்.

பதிவு மற்றும் விசாரணைகளுக்கான தொடர்பு விவரங்கள்

யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — ராஞ்சி
பரமம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி – 834001
ஜார்கண்ட்

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனி, 9:00 a.m. – 4:30 p.m.)
ஈமெயில்: helpdesk@yssi.org

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர